லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் கனடாவின் முன்னாள் மத்திய வங்கித் தலைவர் மார்க் கார்னி(Mark Carney) வெற்றி பெற்றுள்ளார்.
அவர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப்(justin trudeau) பிறகு கனடாவின் (canada)பிரதமராகவும் லிபரல் கட்சித் தலைவராகவும் பதவியேற்பார்.
அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றி
லிபரல் கட்சி தலைமைப்பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதன்படி வாக்காளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு,
மார்க் கார்னி (Mark Carney) – 131,674 வாக்குகள் 85.9% வாக்குகளுக்கு சமம்
கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்(Chrystia Freeland) – 11,134 வாக்குகள் 8% வாக்குகளுக்கு சமம்
கரினா கோல்ட் (Karina Gould )- 4,785 வாக்குகள் 3.2% வாக்குகளுக்கு சமம்
ஃபிராங்க் பேலிஸ்(Frank Baylis) – 4,038 வாக்குகள் 3% வாக்குகளுக்கு சமம்

