தேசிய மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக லக்ஷ்மன் நிபுண ஆராச்சி தெரிவு செய்யப்படவுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தற்போது இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகியுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்படும்
கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்த லக்ஷ்மன் நிபுண ஆராச்சி அந்த வெற்றிடத்துக்கு நியமிக்கப்படவுள்ளார்.
அதனடிப்படையில் இந்த வாரத்துக்குள் அவர் தேசிய மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன் பின்னரே புதிய ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.