அரசால் சமர்ப்பிக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு
நாடாளுமன்றம் நேற்று(19.12.2025) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை
மீளக்கட்டியெழுப்புவதற்கான நிதியைப் பெறும் நோக்கிலேயே குறைநிரப்பு பிரேரணை
முன்வைக்கப்பட்டிருந்தது.
பிரேரணை அங்கீகரிப்பு
இந்தப் பிரேரணை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவால் சபையில்
சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முற்பகல் முதல் மாலை வரை பிரேரணை தொடர்பில் விவாதம்
நடத்தப்பட்டது.
விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பின்றி குறைநிரப்பு பிரேரணை
அங்கீகரிக்கப்பட்டது.

