பாகிஸ்தானில்(pakistan), மதநிந்தனையில் ஈடுபட்டதாக கூறி, தனக்கு மரண தண்டனை அளிக்கும் நிலை ஏற்பட்டது என மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ., மார்க் ஜுக்கர்பெர்க்(mark-zuckerberg) தெரிவித்துள்ளமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா(meta) நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆன அவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது:
பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள்
பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன. பேஸ்புக்கில் மதநிந்தனை செய்யும் வகையில் யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படத்திற்காக எனக்கு மரண தண்டனை பெற்றுத்தர ஒருவர் முயன்றார்.
குறிப்பிட்ட நாடுகளில் உள்ளூர் விதிமுறைகள் மற்றும் கலாசார விழுமியங்களை மதித்து சுதந்திரமான வெளிப்பாட்டை சமநிலைப்படுத்த மெட்டா உறுதிபூண்டுள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்
பாகிஸ்தானுக்கு செல்லும் திட்டம் இல்லை
ஆனால், பாகிஸ்தானுக்கு செல்லும் திட்டம் ஏதும் இல்லாத காரணத்தினால், அந்த வழக்கை பற்றி நான் கவலைப்படவில்லை.
உலகில் பல்வேறு நாடுகளில் கருத்து சுதந்திரம் என்பதற்கு வெவ்வேறான மதிப்பீடுகள் உள்ளன.
அந்த அரசாங்கங்கள் எங்களை முடக்கவும், சிறையில் அடைக்கவும் நினைக்கின்றனர்.
இதனை சிலர் சரி என கருதுகின்றனர்.உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.