முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கண்டியில் பாரிய மண்சரிவு! 20 குழந்தைகள் உள்ளிட்ட 120 பேர் மாயம்

நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அங்கும்புர – அலவதுகொட வீதியில் ரம்புக் எல பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு காரணமாக இடம்பெயர்வு மற்றும் உயிர் இழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தாலும், இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று காவல்துறை கூறுகிறது.

குறித்த கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வந்தன, அவர்களில் பெரும்பாலோர் இப்போது காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரநாயக்க – அம்பலாங்கந்தை 

கண்டி  அரநாயக்க அம்பலாங்கந்தை 120 பேரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அலவதுகொடை – கல்கொட்டுவ

கண்டி ஹரிஸ்பத்துவ மாவட்டத்தின் அலவதுகொடை – கல்கொட்டுவ பகுதியில் இன்று காலை பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் தெரிவித்ததாவது
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிலத்தின் நிலைமை மிகவும் அமைதியற்றதும் ஆபத்தானதும் ஆக இருப்பதால்
மீட்புக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு செல்ல முடியவில்லை.

மேலும், 40 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நிலம் சரிவு ஏற்படும் அபாயம் தொடர்வதால் அணுகுவதில் மிகுந்த சிரமம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டியில் பாரிய மண்சரிவு! 20 குழந்தைகள் உள்ளிட்ட 120 பேர் மாயம் | Massive Landslides In Kalkottuwa Area

கொழும்பு – கண்டி பிரதான வீதி உதுவான்காந்த பகுதியில் பாரிய மண்சரிவு 

கண்டியில் பாரிய மண்சரிவு! 20 குழந்தைகள் உள்ளிட்ட 120 பேர் மாயம் | Massive Landslides In Kalkottuwa Area

கண்டியில் பாரிய மண்சரிவு! 20 குழந்தைகள் உள்ளிட்ட 120 பேர் மாயம் | Massive Landslides In Kalkottuwa Area

வெலிமடை

வெலிமடை – கெப்பெட்டிப்பொல காவல் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் தற்போது வரையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்பு பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதன் காரணமாக வெலிமடை – நுவரெலியா வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து காணமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்