மொண்டெனேகுரோ (Montenegro) தேசிய கால்பந்து அணியின் வீரர் மதிஜா சார்கிக் (Matija Sarkic) 26 வயதில் உயிரிழந்த சம்பவம் கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இன்று (15) காலை திடீரென மரணமடைந்ததாக மொண்டெனேகுரோ கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் Grimsby நகரில் பிறந்த கால்பந்து வீரர் மதிஜா சார்கிக் மாண்டெனேக்ரோ தேசிய அணிக்காக விளையாடி வந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்த நிலையில் Budva நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் இருந்த சார்கிக் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இவரின் மரணம் இயற்கையான காரணங்களால் ஏற்பட்டதாக வைத்திய அறிக்கைகள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சார்கிக்கின் உயிரிழப்பு தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.