முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசுக் கட்சிக்குள் இழிவான அணி..! சுமந்திரன் வெளிப்படை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரணச்சடங்கினை வைத்து அரசியல் செய்யும் எமது கட்சியின் இழிவான அணியுடன் இணைய முடியாது என அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “சேனாதிராஜா சுகவீனம் அடைந்ததும் அவரை வைத்தியசாலையில் பார்வையிட்டேன். பின்னர் அவருடைய மரணச்செய்தி கேட்டதும் நேரடியாக வீட்டுக்குச் சென்று அஞ்சலித்து அவரது குடும்பத்தாருடன் ஒன்றரை மணிநேரத்துக்கும் அதிகமாக உரையாடியே வந்திருந்தேன்.

நெருக்கமானவர்கள் 

ஆனால், எனக்குப் பின்னர் சென்றவர்கள் தவறாக நடத்தப்பட்டார்கள். சேனாதிராஜாவுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்ட குலநாயகம் அங்கு முழுமையாகவே செல்ல முடியாத நிலைமையே இருந்தது.

தமிழரசுக் கட்சிக்குள் இழிவான அணி..! சுமந்திரன் வெளிப்படை | Mavai Death Sumanthiran Interview

இறுதிச்சடங்கில் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று நான் உள்ளிட்டவர்களின் புகைப்படத்துடன் பதாகைகளை கட்டினார்கள். நாங்கள் சென்றால் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு குண்டர்களும் இருந்தார்கள்.

ஆகவே, மறைந்த தலைவருக்கு நான் இறுதி அஞ்சலி செலுத்தவதற்காகச் சென்று அங்கு சலசலப்பு ஏற்பட்டால் அது சேனாதிராஜாவிற்கே அகௌரவத்தினை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் அதனால் ஒதுங்கியிருந்தேன்.

அதுமட்டுமன்றி, மரணச்சடங்களில் அரசியல் செய்கின்ற மிக மோசமான நிலைமை இருந்தது. அந்த நிலைமைக்கு வெளியில் இருப்பவர்களும், எமது கட்சியின் சிலரும் காரணமாக இருக்கின்றார்கள் என்பது மிகவும் மோசமானதொரு விடயமாகும்.

 ஒழுக்காற்று நடவடிக்கைகள் 

நான் உள்ளிட்டவர்களின் பங்கேற்பின்மையை பெரு வெற்றியாகக் கொண்டாடுபவர்களும் கட்சிக்குள் இன்னமும் இருகின்றார்கள்.

தமிழரசுக் கட்சிக்குள் இழிவான அணி..! சுமந்திரன் வெளிப்படை | Mavai Death Sumanthiran Interview

இந்நிலையில், மரணச்சடங்கை அரசியலுக்காக பயன்படுத்துகின்ற இழிவான அணியொன்று கட்சிக்குள் இருந்தால் அந்த அணியுடன் எப்படி நான் உள்ளிட்டவர்கள் இணைந்து செல்ல முடியும்?

ஆகவே, அந்த வேறுபாடுகள் தான் இரு அணிகளாக தெரிகின்றன.
குறித்த விடயம் சம்பந்தமாக நாம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம்.

கட்சித்தலைவர் தற்போது பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார். விசாரணைகள் நடைபெறுகின்றன. விரைவில் இதன் சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்படுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.