முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு குறித்து வெளியாகவுள்ள அறிக்கை: மாவை வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தமிழரசுக் கட்சி அறிக்கை
ஒன்றை வெளியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (10.09.2024) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் விசேட குழுக் கூட்டத்திற்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏற்கனவே சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக ஏற்கனவே 6 பேர் கொண்ட குழு ஒன்று
அமைக்கப்பட்டிருந்தது.

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 

இந்த தேர்தலில் எமது மக்கள் எவ்வாறு வாக்களிக்க
வேண்டும், என்ன அடிப்படையில வாக்களிக்க வேண்டும், அதற்காக கட்சி ரீதியான
கொள்கை, எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பவற்றுக்கு
ஆதரவான அறிக்கையை நாம் எதிர்பார்க்கின்றோம்.

தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு குறித்து வெளியாகவுள்ள அறிக்கை: மாவை வெளியிட்டுள்ள தகவல் | Mavai Senadhiraja Press Meet

இதனடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்த தேர்தல் அறிக்கை காரணமாக வேட்பாளர் சஜித்
பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக கொள்கை அடிப்படையில் இணக்கம் ஏற்பட்டு
அதில் எங்களுக்கும், அவருக்கும் இணக்கம் ஏற்படக் கூடிய விடயங்களை
அடையாளப்படுத்தி எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன் அல்லது 15 ஆம் திகதி கூடி
ஆராய்ந்து பொதுமக்களுக்காக அறிக்கையை வெளியிடவுள்ளோம். 

இதன்போது, நீங்கள் ஒரு கட்சியின் உடைய தலைவர். ரணில் விக்கிரமசிங்க
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தாங்கள் கருத்து வெளியிட்டு இருந்தீர்கள்.

அதேவேளை, நாங்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறவில்லை. நான் ஆரம்பத்திலும் கூறிய கருத்து
கட்சி கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் எடுத்த தீர்மானம் என்ன
என்ற விளக்கம் எனக்கு தேவைப்பட்டிருந்தது.

இறுதி முடிவு 

அப்போது கட்சி முன்வைத்த கருத்தை
ஆராய்ந்து அதனை மக்கள் மத்தியில் முன்வைப்போம் எனத் தான் கூறினேன். பத்திரிகை
ஒன்று ஏதோ தேடிப் பிடித்து தலைப்புச் செய்தியாக ஒன்றை பிரசுரித்ததைப் பார்த்து
நான் மாறுபட்டு சொன்னேன் என கூற முடியாது.

தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு குறித்து வெளியாகவுள்ள அறிக்கை: மாவை வெளியிட்டுள்ள தகவல் | Mavai Senadhiraja Press Meet

இப்பொழுதும் கட்சி எடுத்த முடிவு
தொடர்பில் பேசினோம். இறுதி முடிவு தான் முக்கியமானது. இன்றும் அதில் என்ன
மாற்றங்கள், திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் கதைத்துள்ளோம். அதற்கு
பொருத்தமாக அறிக்கைளை பொது மக்களுக்கு வழங்குவோம்.

கட்சியின் பலம், மக்களின்
பலம் என்பவற்றை ஆராய்ந்து ஜனநாயக ரீதியாக அதனை சரியாக பயன்படுத்த வேண்டும்.
அதற்கு ஏற்ப பொருத்தமான ஒரு அறிக்கையை தேவைப்பட்ட திருத்தங்களுடன் இறுதியாக
வெளியிடுவோம். அது தான் எமது இறுதி அறிக்கையாக இருக்க முடியும். அது பற்றியே
பேசி வருகின்றோம்” என தெரிவித்துள்ளார். 

மேலும், சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர்
மாவை சேனாதிராஜா, பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற
உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி. சிறீதரன் மற்றும் வடமாகாண சபை அவை
தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

அத்துடன், மட்டக்களப்பு முன்னாள் மேயர் சரவணபவன் கலந்துகொள்ள முடியாமையினால் ஆறு பேர்
கொண்ட குழுவில் 5 பேர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.