இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளார்
அவர் இன்று காலை (28.01.2025) யாழ்.போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நரம்பு வெடிப்பு
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தற்போது அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
-யாழ். நிருபர் பிரதீபன்-