முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவையின் மறைவு தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பு : அங்கஜன் இரங்கல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) மறைவு தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார்.

மாவை. சேனாதிராஜாவின் மறைவையிட்டு அங்கஜன் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மதிப்புக்குரிய மாவை சேனாதிராஜா ஐயா, தனது 19 வயதில் தொடங்கிய அரசியல் பயணத்தை 83 வயதுவரை இடையறாது தொடர்ந்த முழுநேர அரசியல் தலைவராக அவர் திகழ்ந்திருந்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தொண்டனாக ஆரம்பித்து தலைவராக தெரிவாகிய ஒரே அரசியல்வாதியும் அவராகவே காணப்படுகிறார்.

மாவையின் மறைவு தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பு : அங்கஜன் இரங்கல் | Mavai Senathirajah Death Angajans Condolences

1969 – 1983 வரையான எனக்கு முன்னைய காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான அரசுகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக அரசியல் களங்களில் போராடி சிறைகளில் அடைக்கப்பட்டும் மௌனிக்காத அவரது குரல், 80களில் இளைஞர்களின் அரசியல் பாதைக்கு வலுச்சேர்த்திருந்தது.

எனது பிரதேசத்தவராக மாவை ஐயா எனக்கு ஒரு அரசியல் வழிகாட்டியாகவும் இருந்தார். யுத்தத்தால் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தின் பிரதேசமான வலி வடக்கின் நிலங்களுக்காகவும், மீள்குடியேற்றத்துக்காகவும், மக்களின் வாழ்க்கைத்தர மேம்படுத்தலுக்காகவும் அவர் பல வகைகளில் போராடியிருந்தார்.

அரசியல் பரப்புக்கு பேரிழப்பு

நாடாளுமன்றத்திலும் நீதிமன்ற வழக்குகளாலும் தனது குரலை தன் தொகுதிக்காக அவர் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

தன்னை நேசிக்கும், தான் நேசிக்கும் தமிழ் மக்களுக்கான அவரது அந்த விடாமுயற்சியும், இலக்கு நோக்கிய உழைப்பும் அரசியலில் நான் அவரிடம் கற்றுக்கொண்ட பாடமாகும்.

மாவையின் மறைவு தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பு : அங்கஜன் இரங்கல் | Mavai Senathirajah Death Angajans Condolences

அன்னாரின் இழப்பு, தமிழர்களின் அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும். அவரது அரசியல் அனுபவங்களை பெற்று அவர் விட்டுச்சென்ற பணிகளை பின்தொடர வேண்டியதே இளையோராகிய எம் கடமை.

மதிப்புக்குரிய மாவை சேனாதிராஜா ஐயாவின் மறைவால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக மாவைக் கந்தனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.