முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு மகிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிய விடயம்

சமாதானத்துக்கான கரங்களை நாங்கள் நீட்டிய போது மாவை சேனாதிராஜா எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாவை.சேனாதிராஜாவின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியவாதம்

குறித்த இரங்கல் செய்தியில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்மாவை சேனாதிராஜாபின் பிரதான உறுப்பு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு மகிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிய விடயம் | Mavai Senathirajah Passed Away Mahinda Condolences

1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் பிறந்த மாவை சேனாதிராஜா, பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளியாரி பட்டத்தை பெற்று தமிழ் தேசியவாதத்துக்காக அரசியலுக்கு பிரவேசித்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை படுகொலை செய்ததன் பின்னர் ஏற்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்துக்கு திரவிட ஐக்கிய விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி மாவைசேனாதிராஜா முதல் தடவையாக 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

மாவை சேனாதிராஜா

1999 ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அக்கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்தார்.

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு மகிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிய விடயம் | Mavai Senathirajah Passed Away Mahinda Condolences

2000 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னரும் யாழ் மக்களின் பிரதிநிதியாகவே மக்களுக்கு சேவையாற்றினார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக 2014 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட மாவை. சேனாதிராஜா 2024 ஆம் ஆண்டு சுய விருப்பின் அடிப்படையில் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

எதிர் அரசியல்

எமக்கு எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் நாடாளுமன்றத்தில் சந்திக்கையில் இணக்கமாகவே செயற்படுவார்.

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு மகிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிய விடயம் | Mavai Senathirajah Passed Away Mahinda Condolences

சமாதானத்துக்கான கரங்களை நாங்கள் நீட்டிய போது மாவை சேனாதிராஜா சமாதானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.

காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்”என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.