யாழ். மாநகர சபையின் மேயர்
பதவிக்கு விவேகானந்தராஜா
மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என
அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(10.06.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“கட்சி மட்டத்தில் யாழ். மாநகர
சபை மேஜர் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.
துணை மேயர்
இதன்போது, யாழ். மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா
மதிவதனியின் பெயரும் யாழ். மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல்
தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

யாழ். மாநகர சபைக்கான மேயர்,
துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும்
13ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

