வன்னியில் (vanni) டெலோ சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனை (Senthilnathan Mayuran) களமிறக்கி உள்ளதாக செல்வம் அடைகலநாதன் (Selvam Adigalanathan) தெரிவித்துள்ளார்.
வவுனியா (Vavuniya) வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில்
போட்டியிடுவதற்கு டெலோ மற்றும் புளொட் தலா ஒருவரை நியமிக்க வேண்டிய நிலை
காணப்பட்ட போதிலும் தற்போது டெலோ தமது சார்பில் செந்தில்நாதன் மயூரனை களமிறக்கியுள்ளது.
வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் ஏழு பேர்
பெயர் விவரங்கள் வெளியிடப்பட்ட நிலையில் அதில் ஈ பி ஆர் எல் எப் சார்பில்
பெயரிடப்பட்ட சிவசக்தி ஆனந்தன் (Shiva Shakti Anandan) தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதில்
சந்தேகம் காணப்பட்டு வருகின்றது.
மாகாண சபை உறுப்பினர்
இதேவேளை, ஏற்கனவே டெலோ மற்றும் புளொட் சார்பில் தலா ஒருவரை பெயரிட வேண்டிய
தேவையும் காணப்பட்டது.
இந்தநிலையில், டெலோ தமது சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வவுனியாவின்
பிரபல வர்த்தகருமான செந்தில்நாதன் மயூரனை பெயரிட்டுள்ளதாக அக் கட்சியின்
தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.