முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த மரணம்

அமெரிக்காவில்(us) 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தட்டம்மை(Measles) மரணம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெக்சாஸில் நேற்று(27) ஒரு குழந்தை தட்டம்மை நோயால் இறந்தது, இது 2015 க்குப் பிறகு நாட்டில் பதிவான முதல் தட்டம்மை மரணம் என்று அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

140க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மேலும், டெக்சாஸ் மற்றும் நியூ மெக்ஸிகோ மாநிலங்களில் தற்போது ஒரு தொற்றுநோயாக மாறியுள்ள தட்டம்மை, அந்த மாநிலங்களில் 140க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த மரணம் | Measles Death In The Us After 10 Years

இறந்த குழந்தைக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்படவில்லை என்றும், கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள்

தட்டம்மை மரணம் பதிவான டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி எமி தோம்சன், தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவதாகக் கூறினார்.

அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த மரணம் | Measles Death In The Us After 10 Years

இருப்பினும், தொற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், தேவையான முறையான சிகிச்சை மற்றும் வசதிகளை வழங்குவதில் சிரமங்கள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டெக்சாஸ் மற்றும் நியூ மெக்ஸிகோவிலிருந்து தட்டம்மை நோய் தெடார்பாக பதிவாகியிருந்தாலும், டெக்சாஸ் சுகாதார அதிகாரிகள் இந்த தொற்றுநோய் இப்போது சுமார் 10 மாநிலங்களுக்கு பரவியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

2000 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தட்டம்மை ஒழிக்கப்பட்டதாக அறிவித்தனர், ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட மறுத்ததே காரணம் என்று சுகாதார அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.