ஈரானில் (Iran) பயணிகள் விமானம் ஒன்றின் இயந்திரத்தில் சிக்கி தொழில்நுட்பவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவமானது ஈரானின் Chabahar Konarak விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
உள்ளூர் தொழில்நுட்பவியலாளரான அபோல்பஸ்ல் அமிரி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு பலி
குறித்த நபர் தனது வழக்கமான பராமரிப்பு வேலைகளை செய்துகொண்டிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விமானத்தின் வலது இறக்கையில் உள்ள இயந்திரத்தை திறந்து சோதனைக்காக இயக்கப்பட்ட போது கவனக்குறைவாக நெருங்கிய அந்த தொழில்நுட்பவியலாளர் அதனுள் காணப்பட்ட இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, இயந்திரம் தீ பற்றியெரிந்துள்ள நிலையில் உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிக் குழுவினர் அந்த தொழில்நுட்பவியலாளரின் உடலை இயந்திரத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து ஈரானிய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.