போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக செயலாளர் சுரங்க லக்மல் செனவிரத்ன பதவி விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பல அதிகாரிகள்
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாததால் அவர் பதவி விலகியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவரைத் தவிர, முக்கியப் பதவிகளை வகித்த பல அதிகாரிகள் அண்மைய காலங்களில் பதவி விலகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், அண்மைய அமைச்சரவை மாற்றத்தில், அமைச்சர் ரத்நாயக்கவின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சு பதவி மீள பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

