யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் சாவகச்சேரி நகர
வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (27) சாவகச்சேரியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில்
நடைபெற்றது.
வியாபார நிலையங்கள் முற்றாக அழிவடைந்த வர்த்தகர்கள்
சாவகச்சேரி நகர சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகள் அண்மையில்
குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்க கேள்வி கோரப்பட்டிருந்தது.
குறித்த கேள்வி கோரலினால் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் ஏற்கனவே வியாபார
நிலையங்கள் வைத்திருந்து யுத்தத்தினால் வியாபார நிலையங்கள் முற்றாக அழிவடைந்த
வர்த்தகர்ளும் தங்களுக்கும் வர்த்தக நிலையங்களை வழங்க வேண்டும் என்று கோரியும்
சாவகச்சேரி நகர சபை முன்றலில் முன்னாள் நகரசபை உறுப்பினர் மற்றும்
முன்னாள் பிரதேச சபை உபதவிசாளர் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.