முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பிடம் அடிபணிந்தது மெட்டா நிறுவனம் : பில்லியன் கணக்கில் செலுத்தப்போகும் நட்டஈடு

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கிய வழக்கில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு (trump)22 மிலலியன் டொலர் நிவாரணம் வழங்க மெட்டா(meta) நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில்(us) கடந்த 2021ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அப்போது, தோல்வியை தழுவிய டொனால்ட் டிரம்ப், அதனை ஏற்க முடியாமல், தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.

மேலும், தனது பேச்சை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்தார்.

வன்முறையில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள்

அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள், ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்க இருந்த தலைமை செயலக கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

ட்ரம்பிடம் அடிபணிந்தது மெட்டா நிறுவனம் : பில்லியன் கணக்கில் செலுத்தப்போகும் நட்டஈடு | Meta Company Bowed To Trump

இதைத் தொடர்ந்து, கோடிக்கணக்கான பின்தொடர்பவர்களை கொண்ட டிரம்ப்பின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா அதிகாரபூர்வ கணக்குகள் முடக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தன் மீது அவதூறு சுமத்தி, தன்னுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி விட்டதாக டிரம்ப் வழக்கு தொடர்ந்தார். தற்போது அவர் மீண்டும் ஜனாதிபதியான நிலையில், இந்த வழக்கில் பணிந்து போக மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அடிபணிந்த மெட்டா நிறுவனம்

கணக்கை முடக்கியதால் பாதிக்கப்பட்ட டிரம்ப்புக்கு 22 மில்லியன் டொலர் நிவாரணம் வழங்க மெட்டா முன்வந்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ., மார்க் ஜூகர்பெர்க் தரப்பு சட்டத்தரணி, கலிபோர்னியா நீதிமன்றுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ட்ரம்பிடம் அடிபணிந்தது மெட்டா நிறுவனம் : பில்லியன் கணக்கில் செலுத்தப்போகும் நட்டஈடு | Meta Company Bowed To Trump

அந்த கடிதத்தில், ‘இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால், இந்த வழக்கை விரைவில் முடித்துக் கொள்கிறோம்,’ எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தொகை தொடர்பாக எந்த விபரமும் குறிப்பிடவில்லை பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த டிரம்ப்புக்கு இது வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்