இந்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் அதிபர் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அதிகரித்துள்ள 10 இலட்சம் வாக்களார்கள்
ஜூலை முதலாம் திகதி முதல் ஆவணம் சான்றளிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களை விட, சுமார் 10 இலட்சம் வாக்காளர்கள் இந்த அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.