முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் சந்திரசேகர் விடுத்த வேண்டுகோள்

இலங்கை மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தவொரு
செயற்பாடுகளுக்கும் கனடா இடமளிக்கக் கூடாது என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸிடம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ்
ஆகியோருக்கிடையில் நேற்று(21.05.2025) புதன்கிழமை கொழும்பில் அமைச்சகத்தில் விசேட
சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

தீய சக்திகள்

நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப அரசாங்கம் பெரும்
முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எந்த வடிவத்திலும் இனவாதத்துக்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர்
திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் சந்திரசேகர் விடுத்த வேண்டுகோள் | Minister Chandrasekar Request For Canada

அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்ப மீண்டும் இனவாதப் பிரிவுகளைத் தூண்டிவிட
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில தீய சக்திகள் முயற்சிப்பதாகவும் அவர் கவலை
தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுப்படுத்தும் எந்தவொரு
செயற்பாடுகளுக்கும் கனடா இடமளிக்கக் கூடாது என்றும் கனேடியத் உயர்ஸ்தானிகரிடம் அவர்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனடாவின் தொடர்ச்சியான ஆதரவு

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ், இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு கனடாவின்
முழு ஆதரவை வழங்குவதாகக் கூறியுள்ளார்.

ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு தேசிய மக்கள் சக்தி பெற்ற
வலுவான மக்கள் ஆணையை அவர் குறிப்பாகப் பாராட்டியுள்ளார்.

கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் சந்திரசேகர் விடுத்த வேண்டுகோள் | Minister Chandrasekar Request For Canada

இந்த முயற்சிகளுக்குக் கனடாவின் தொடர்ச்சியான ஆதரவை உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியுள்ளார்.

புதிய அரசை சர்வதேச சமூகம் வரவேற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்