ஊடகவியலாளர் இசைப்பிரியா மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினது தலைவரின் மகன் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்(Saroja Savithri Paulraj) குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு குற்றவாளிகள் தண்டிக்கப்டுவது இலகுவான விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் யுத்தத்தின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பிலும் அதற்குரிய குற்றவாளிகள் இனம்காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்…
https://www.youtube.com/embed/rDO16eicdLw