ஆப்கானிஸ்தானில் (Afghanistan) நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், விவகாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த கலில் ஹக்னி (Khalil Haqqani) கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது காபுலில் (Kabul) உள்ள அகதிகள் விவகாரத்துறை அமைச்சக அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில் இதில் அகதிகள் விவகாரத்துறை அமைச்சராக கலில் ஹக்னி செயல்பட்டு வருகின்றார்.
தலிபான்கள் ஆட்சி
இந்தநிலையில், இவரது அமைச்சக அலுவலகத்திற்கு வந்த நபர் தன் உடம்பில் மறைத்து கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.
குறித்த தாக்குதலில் அமைச்சர் உட்பட அலுவலக ஊழியர்கள் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து அகதிகள் விவகாரத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.