முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மின்வெட்டு தொடர்பில் முன்னரே அறிந்திருந்த மின்சக்தி அமைச்சர்!

மின் கட்டமைப்பின் சமநிலை குறித்து 8 வாரங்களாக மின்சாரசபை பொறியியலாளர்களால் மின்சக்தி அமைச்சருக்கு அறிவித்ததாகவும், இது தொடர்பில்  அமைச்சரால் ஏன் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கருத்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக பாரிய பொருளாதார நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு குரங்குகள் தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது.

அதன் பின்னர் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மையே காரணம் எனக் குறிப்பிடப்பட்டது.

மின்சக்தி அமைச்சர்

இறுதியில் நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகளின் செயலிழப்பே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மின்சக்தி அமைச்சர் இவை அனைத்துக்கும் அப்பால் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் எனத் தெரிவித்தார்.

மின்வெட்டு தொடர்பில் முன்னரே அறிந்திருந்த மின்சக்தி அமைச்சர்! | Minister Knew About The Power Cut In Advance

அவ்வாறெனில் இவ்வாறான நிலைமை ஏற்படும் வகையில் கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன?

தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் சூரிய மின் உற்பத்தியின் ஊடாக 1,300 மெகாவோல்ட் மின்சாரத்தை இணைத்தமை தவறான தீர்மானமா?

சமநிலையற்ற நிலை

தேசிய மின் கட்டமைப்பில் இவ்வாறு சமநிலையற்ற நிலை ஏற்படுவதாக அது குறித்து நாளாந்தம் கண்காணித்து வந்த பொறியியலாளர்கள் அமைச்சருக்கு புதுப்பிக்கப்பட்ட நிலைமைகளை தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

மின்வெட்டு தொடர்பில் முன்னரே அறிந்திருந்த மின்சக்தி அமைச்சர்! | Minister Knew About The Power Cut In Advance

அந்த வகையில் இரு மாதங்களாக இது தொடர்பில் மின் சக்தி அமைச்சரால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

முன்னரே அறிந்திருந்த தகவல்களின் அடிப்படையில் மக்களை அறிவுறுத்தியிருந்தால் அசௌகரியங்களையாவது குறைத்திருக்கலாம்” என்றார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்