தனக்கு டிமென்சியா (Dementia), அதாவது மறதி நோய் இருப்பதாக அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற அரசு நில அளவையாளர்கள் சங்கத்தின் 99ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது அவர், “எனக்கு டிமென்சியா இருக்கின்றது. நான் கொஞ்சம் கொஞ்சமாக விடயங்களை மறந்துவிடுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மறந்து விட்டேன்..
டிமென்சியா என்பது மூளையின் சில பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் ஒரு நோய் நிலைமை, இதனால் நரம்பு செல்கள் மற்றும் அவற்றின் இணைப்புகள் சரியாக செயல்படுவதை நிறுத்துகின்றன.

இந்த நோய் நினைவாற்றல் இழப்பு, சிந்திக்கும் திறன் குறைதல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் குறைதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
மேலும், நினைவாற்றல் இழப்பு, அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதில் திறன் குறைதல், பேசுவதிலும் மொழியைப் புரிந்துகொள்வதிலும் சிரமம், மனநிலை மற்றும் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை டிமென்சியாவின் முக்கிய அறிகுறிகளாகும்.

இவ்வாறான ஒரு நிலையில் தனக்கு இந்நோய் இருப்பதாக தெரிவித்த விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த, அமைச்சரவை அமைச்சர் உள்ளிட்ட தனது முக்கிய பதவிகளின் பொறுப்புகளையும் சமநிலையான முறையில் நிறைவேற்றுவதில் தாம் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அண்மைய நிகழ்வுகளை மறந்துவிட்டதால், தன்னுடன் விவாதிக்கப்பட்ட குறிப்பிட்ட விடயங்களைப் பற்றி எழுத்துப்பூர்வமாக தனக்கு தருமாறு தொழிற்சங்க உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

