முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவீரர் தின நிகழ்வு தொடர்பாக இனவாத கருத்துக்கள் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை

வடக்கில் 244 நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயெ இதனைத் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இன, மத பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, வடக்கிலும் தெற்கிலும் உள்ள இலங்கையர்களுக்கு தேசிய ஒற்றுமைக்கான ஆணையை வழங்கியுள்ளோம்.

இறந்த உறவினர்களை நினைவுகூர உரிமை

கடந்த சில நாட்களாக, மாவீரர் நிகழ்வுகள் குறித்து சமூகத்தில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, இறந்த உறவினர்களை நினைவுகூர உரிமை உள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

மாவீரர் தின நிகழ்வு தொடர்பாக இனவாத கருத்துக்கள் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை | Minister Of Public Security Ananda Wijepala

ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால், அந்த அமைப்புக்கு சொந்தமான கொடிகளைக் காட்டிக் கொண்டாடுவதற்கு வாய்ப்பில்லை என நான் கூறிய கருத்தை திரித்து, தவறான அர்த்தம் கொடுக்கும் வகையில் வெளியிடப்பட்டது.

வடக்கில் 244 நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இணையத்தில் இருந்து பதிவிறக்கம் 

வடக்கில் மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் காணொளிகளானது கடந்த காலங்களில் வெளிநாடுகளில் நடைபெற்ற வைபவங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

மாவீரர் தின நிகழ்வு தொடர்பாக இனவாத கருத்துக்கள் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை | Minister Of Public Security Ananda Wijepala

அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வடக்கில் புலிகளின் நினைவேந்தலுக்கு அனுமதி அளித்ததாக சிலர் நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

விசாரணையில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபட்டது உறுதியானது என்றும் இது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.