தோட்ட தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை எனவும் தோட்ட மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொறுப்பான அமைச்சர்கள் இருப்பதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
புலமைச் சொத்து சட்டமூலம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினுடைய சொத்துக்களை சூறையாடியவர்கள்
நாட்டில் சில காலமாக தேவையில்லாத பயங்களை சிலர் கட்டமைத்து விடுகின்றனர்.
இவ்வாறான பீதிகளை உருவாக்குவதற்கு முக்கிய காரணம் கடந்த 76 வருடங்களாக நாட்டினுடைய சொத்துக்களை சூறையாடியவர்களே இதற்கு காரணகர்த்தா ஆவர் என்று கடற்தொழில் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இடைநடுவே மறுத்து பேசிய ஜீவன் தொண்டமானுக்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மலையக மக்கள் எப்பொழுதே உங்களை கைகழுவி விட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.