முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையினை பார்வையிட்ட அமைச்சர் குழாம்

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையினை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி  பார்வையிட்டுள்ளார்.

கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில் குறித்த இடத்திற்கு இன்று(07) அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, அச்சுவேலியில் இயங்கி வரும் மரக்கறி எண்ணைய் உற்பத்தி செய்யும்
நிலையத்தினை பார்வையிட்டு அதன் செயற்பாடுகள் தொடர்பில் ஊழியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

களப்பணியின் நோக்கம் 

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், அனைத்து கைத்தொழில் நிலையங்களையும் மேம்படுத்தி அவற்றின் வினைத்திறனை
அதிகரிக்கும் நோக்கில் குறித்த களப்பணி இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர்
ஹர்சன சூரிய பெரும, நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், கோப்பாய் பிரதேச செயலர் சிவஸ்ரீ
உள்ளடோர் கலந்து கொண்டிருந்தனர்.  

சீமெந்து தொழிற்சாலை

யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் குழு இன்று (7) காலை
கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில்
ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும,
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர் குழுவினரே
சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்டனர்.

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையினை பார்வையிட்ட அமைச்சர் குழாம் | Ministers Visit Achuveli Industrial Estate

குறித்த சீமெந்து தொழிற்சாலை முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு கையளிக்கப்பட்ட
நிலையில் அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை ஆராயும் வகையில் அமைச்சர்
குழுவினரின் குறித்த விஜயம் அமைந்தது.

இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா ,
யாழ்ப்பாண மாவட்ட பதிலீ செயலாளர் ம.பிரதீபன், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள்
என பலரும் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.