பாடசாலைகளில் மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு முறையாக பணம் வழங்காத வலயக் கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை அறிய கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) தீர்மானித்துள்ளது.
மதிய உணவு திட்டத்திற்கு தேவையான அனைத்து பணமும் மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும் வலயக் கல்வி அலுவலகங்கள், உணவு வழங்குனர்களுக்கு பணம் செலுத்தவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதில், மேல் மாகாணத்தில் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு
மேல்மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு இரண்டு மாதங்களாக பணம் கிடைக்கவில்லை எனக் கூறி மதிய உணவு வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர்.
பணம் கிடைக்கும் வரை உணவு வழங்க முடியாது என விநியோகஸ்தர்கள் அதிபர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இரண்டு மூன்று மாதங்களுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் ஆனால் அப்போதும் தொடர்ந்து உணவு விநியோகம் செய்த வழங்குநர்கள், அரசாங்கத்திற்கு இதை தெரியப்படுத்தும் நோக்கிலேயே நோக்கில் இம்முறை இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.