மிராய்
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தேஜா. இவர் ஹனுமான் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம்தான் மிராய். இப்படத்தை கார்த்திக் காட்டம்நேனி, அனில் ஆனந்த் ஆகியோர் இயக்க கௌரி ஹரி என்பவர் இசையமைத்திருந்தார். இப்படத்தில் மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மிராய் திரை விமர்சனம்
வசூல் விவரம்
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
இந்த நிலையில், மிராய் படம் இதுவரை உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 50+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

