செந்தில்-ஸ்ரீஜா
வானொலியில் இளையராஜா பாடல்களை வைத்து ஒரு அழகிய ஷோ நடத்தி அதன்மூலம் மிகவும் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.
முதன்முதலில் இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்தார், அதன்பிறகு தொடர்ந்து படங்கள் நடித்தாலும் பெரிய ரீச் இல்லை.

சாதனை படைத்த துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம்.. என்ன தெரியுமா?
அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி தொடரில் நடித்து ஆடியன்ஸ் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
இந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவையே காதலித்து திருமணமும் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
தற்போது செந்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடரில் நடித்து வருகிறார்.

புதிய தொழில்
தற்போது புதிய தொழில் தொடங்கியுள்ள செந்தில் இதுகுறித்து ஒரு பேட்டியில், திருவல்லாவில் ஒரு கஃபே விலைக்கு வந்தது, முன்னாடி நடத்தியவர்களால் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

ஸ்ரீஜா அதை வாங்கிப் பண்ணலாம்னு சொன்னதும் நானும் ஓகே சொல்லிட்டேன்.
ஆனா கொஞ்சம் வேலையா தெரியுது, படப்பிடிப்பு முடிஞ்சதும் வீடு என இருந்தவன் இப்போது கேரளா சென்று கஃபே வேலைகளை பார்க்க வேண்டியதாக உள்ளது.
மற்றபடி நிர்வாகம் அனைத்தையும் ஸ்ரீஜா தான் பார்த்துக் கொள்கிறார்கள் என கூறியுள்ளார்.


