நாணய அச்சிடுதல், பண விநியோகம் மற்றும் நாணய மாற்று விகித நிர்ணயம் ஆகிய விவகாரங்கள் குறித்து தொழில்நுட்ப அறிவு இல்லாத தனிநபர்கள் செய்யும் பகுப்பாய்வுகளால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
நாணய அச்சிடுதல், பண விநியோகம் மற்றும் நாணய மாற்று விகித நிர்ணயம் ஆகிய விவகாரங்கள் தொழில்நுட்ப அறிவுடன் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று மத்திய வங்கி மேலும் கூறியுள்ளது.
தவறான தகவல்கள்
தொழில்நுட்ப அறிவு இல்லாத தனிநபர்களால் சமீப நாட்களாக தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு தவறான அறிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி வருவதாக மத்திய வங்கி விளக்கியுள்ளது.
Source: https://ibctamil.com/article/misleading-about-currency-exchange-rate-fixing-1779758470

