தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் அழகிகள் அவமதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த போட்டியின் மேற்பார்வையாளர் இவ்வாறு அழகிகளை அவமதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக்கில் மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் பல்வேறு நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
வாக்குவாதம்
இந்த நிலையில், போட்டியில் கலந்துகொண்ட அழகிகளுக்கும் மிஸ் யூனிவர்ஸ் அமைப்பு மற்றும் மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்தின் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

போட்டியில் கலந்துகொண்ட அழகிகள் பெரும்பாலானோர் விளம்பரப் படங்களில் நடிப்பதில்லை என்று தலைவர் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ அழகி
இதையடுத்து, விளக்கமளிக்க முன்வந்த மெக்சிகோ அழகியை முட்டாள் எனவும் அவர் திட்டியுள்ளார்.

இந்தநிலையில் பெண்ணாகவும் மற்றும் மெக்சிகோ பிரதிநிதியாகவும் தன்னை மதிக்கவில்லை என கோபமுற்ற மெக்சிகோ அழகி, அறையைவிட்டு வெளியேறியுள்ளார்.
இதையடுத்து, மற்றவர்கள் அறையைவிட்டு வெளியேறினால் போட்டியில் பங்கேற்க இயலாது என தலைவர் எச்சரித்துள்ளார்.
மற்றைய நாடு
இருப்பினும், மெக்சிகோ அழகிக்கு ஆதரவாக மற்றைய நாடுகளின் அழகிகளும் அறையைவிட்டு வெளியேறியுள்ளனர்.

அழகிகளின் வெளிநடப்பைத் தொடர்ந்து, தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதனடிப்படையில், தாய்லாந்தில் போட்டி நிலைமையைக் கண்காணிக்க மூத்த நிர்வாகியை அனுப்பி வைக்கவிருப்பதாக மிஸ் யூனிவர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

