முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சம்பந்தனின் மறைவிற்கு மோடி உட்பட இந்திய தலைவர்கள் பலர் இரங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் சம்பந்தனின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு அழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தனின் மறைவிற்கு மோடி உட்பட இந்திய தலைவர்கள் பலர் இரங்கல் | Modi Condlenses To Sambanthan

சம்பந்தனுடனான சந்திப்புக்கள் என்றேன்றும் நினைவில் மிளிரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் சமாதானம், பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கௌரவத்திற்காக அயராது குரல் கொடுத்து வந்த தலைவர் சம்பந்தன் என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

சம்பந்தனின் மறைவு அவரது இலங்கை இந்திய வாழ் நண்பர்கள் மற்றும் பின்தொடர்வாளர்களுக்கு பெரும் இழப்பாக அமையும் என நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

எடப்பாடி கே. பழனிசாமி

அதேவேளை, இரா.சம்பந்தனின் மறைவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் தனது இரங்கலினை தெரிவித்துள்ளார். 

சம்பந்தனின் மறைவிற்கு மோடி உட்பட இந்திய தலைவர்கள் பலர் இரங்கல் | Modi Condlenses To Sambanthan

அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில், ”இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும்,
மறுக்க முடியாதவருமாகிய,

ஈழ தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவரும் ஆன,
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்
(Rajavarothiam Sampanthan), தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று (30.6.2024) இரவு 11 மணியளவில் தனது 91ஆவது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுக்காப்பான வாழ்வியலை கட்டமைக்க, ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

எஸ். ஜெய்சங்கர்

மேலும், இலங்கைத் தமிழர் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

சம்பந்தனின் மறைவிற்கு மோடி உட்பட இந்திய தலைவர்கள் பலர் இரங்கல் | Modi Condlenses To Sambanthan

அவர் கூறுகையில், “பல தசாப்தங்களாக ஆர்.சம்பந்தனுடனான எனது பல சந்திப்புகள் மற்றும் உரையாடல்களை நினைவுகூற வேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கான சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதிக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார். 

இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின்  மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறித்த இரங்கல் செய்தியில், 

சம்பந்தனின் மறைவிற்கு மோடி உட்பட இந்திய தலைவர்கள் பலர் இரங்கல் | Modi Condlenses To Sambanthan

சம்பந்தனின் மறைவிற்கு மோடி உட்பட இந்திய தலைவர்கள் பலர் இரங்கல் | Modi Condlenses To Sambanthan

you may like this

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.