முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறீதரனை விட தேரருக்கு உணவளித்த விடுதலை புலிகள் சிறந்தவர்கள்! தேரர் பகிரங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள “லும்பினி” விகாரையில் தலைமை தேரருக்கு உணவு வழங்கப்பட்டதாக ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

தையிட்டி விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும்,

ஐயா! என்னை பொறுத்தவரையில், உங்களை விட தனது இனத்துக்காக 30 ஆண்டுகள் போராடியவர்கள் சிறந்தவர்கள். அந்த ஆட்சிக் காலத்தில் கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள “லும்பினி” விகாரையில் தலைமை தேரருக்கு உணவு வழங்கப்பட்டது.

மற்றவரின் சந்தோசம்

பௌத்தத்தின் படி திருடுவது கடுமையான பாவம்.
ஏமாற்றுவதும் பாவம். இந்த விகாரை அப்படி உருவாக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். 

சிறீதரனை விட தேரருக்கு உணவளித்த விடுதலை புலிகள் சிறந்தவர்கள்! தேரர் பகிரங்கம் | Monk Criticise Sritharan On Thaiyiddy Temple Issue

அதேபோல், தையிட்டில் விகாரை உங்களுக்கு இடிக்கவேண்டும் என்றால் இடிக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனால், நாங்கள் நாட்டில் எந்த இடத்தில் உள்ள எந்த ஒரு கோவிலையும் இடிக்கப் போவதில்லை.

நாங்கள் பெளத்தர்கள். புத்தர் அருளிய போதனைகளை பின்பற்றியவர்கள் நாங்கள். எங்களுக்கு உண்மையான பெளத்தர்களாக வாழ வேணுமென்றால் முதலில் தன்னுடைய மகிழ்ச்சியை விட மற்றவரின் சந்தோசத்தை பற்றி சிந்திக்க வேண்டும்.

சிவபெருமானின் ஞானம்

ஐயா! நீங்கள் ஒருநாள் எங்கள் விகாரைக்கு வாருங்கள். புத்தர் வணங்க மட்டுமல்ல புத்தர் சிலைக்கு இரு பக்கத்தில் உள்ள இந்து கடவுளான முருகன் மற்றும் விஷ்னு, கண்ணகி (பத்தினி) ஆகிய கடவுள்களை வணங்கலாம் பூஜையும் செய்யலாம்.
ஒருநாள் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

சிறீதரனை விட தேரருக்கு உணவளித்த விடுதலை புலிகள் சிறந்தவர்கள்! தேரர் பகிரங்கம் | Monk Criticise Sritharan On Thaiyiddy Temple Issue

சிவ + ஞானம் எனும் உங்கள் பெயரின் அர்த்தம் சிவபெருமானின் ஞானம் மற்றும் அறிவை கொண்டவர் என்பதாகும். 

உங்களுக்கு சிவபெருமானின் ஞானத்தில் ஒரு துளியும் நாட்டில் மக்களுக்காக சேவை செய்வதற்கு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.