ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் அரச ஊடகங்களில் பிரசாரம் செய்ய நாட்டம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்ளுக்கு அரச தொலைக்காட்சி மற்றும் அரச வானொலியில் பிரசாரம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆறு வேட்பாளர்கள்
எனினும் இந்த நேரத்தை பெற்றுக்கொள்வதற்கு வேட்பாளர்கள் கூடுதல் சிரத்தை காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் வரையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சென்று ஐந்து முதல் ஆறு வேட்பாளர்கள் மட்டுமே தங்களது கொள்கைகளை விளக்கி உரையாற்றியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்த 38 வேட்பாளர்களில் 15 பேர் மட்டுமே பிரசாரப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சில வேட்பாளர்களை தொலைபேசி ஊடாகக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.