முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் சிக்கிய பெருந்தொகையான போதைப்பொருள்

யாழ். (Jaffna) – பருத்தித்துறை (Point Pedro) காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் நேற்றைய தினம் (21.03.2025) இந்த கஞ்சா தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இருப்பினும், இதுவரை எந்த நபர்களும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் சிக்கிய பெருந்தொகையான போதைப்பொருள் | More Than 300 Kg Of Cannabis Seized In Jaffna

கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகு ஆகியவை இன்று (22.03.2025) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம், பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்