இலங்கை அரசாங்கத்தின் (sri lanka government) செயற்பாட்டின் காரணமாகவே தற்போதைய இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக முன்னாள் வடமாகாண சபை
உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) தெரிவித்துள்ளார்.
கரியல்வயல் – சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள சுமார் 130 நபர்களுக்கு எதிராக
வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் நேற்றையதினம்
(28.04.2024) களவிஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து மீண்டும் பெரிய வெங்காயம் இறக்குமதிக்கு நடவடிக்கை
விவசாய நடவடிக்கை
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கரியல்வயல் பகுதியில் தொடர்ச்சியாக நான்கு – ஐந்து தலைமுறையாக
விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களில் சுமார் 130
நபர்களுக்கு எதிராக கடந்த வருடம் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பறவைகள் சரணாலயம்
பகுதிக்குள் இருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கை நிறைவடைந்ததையடுத்து சிறுதானிய பயிர்ச்செய்கையை
மேற்கொள்வார்கள்.
கடந்த 1901 ஆம் ஆண்டு நில அளவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட
வரைபடம் மற்றும் 1908 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதிகளும் இவர்களிடம் இருக்கின்றன.
தற்போது இலங்கை அரசாங்கமானது அட்டூளியமான ஆட்சி நடவடிக்கை முலம்
மக்களுடைய காணிகளை பறித்து தங்களுடைய திணைக்களங்களான வன ஜீவராசிகள், வன
இலாகா, தொல்லியல், இல்மனைற் மற்றும் மகாவலி எல் போன்ற திணைக்களங்களின் ஊடாகவும்
இராணுவம், கடற்படை , விமானப்படை, சிவில் பாதுகாப்பு படை, பொலிஸார் போன்ற
படையினர் ஊடாகவும் மக்களை விவசாயம் செய்ய முடியாதளவிற்கு நிற்கதியாக்கி
பட்டினி போடுமளவிற்கு தள்ளியுள்ளது.
மக்களை பாதுகாக்க வேண்டியதே அரசாங்கம். மக்களை
துன்புறுத்தி கொண்டு இருப்பதனால் மக்கள் இலங்கையில் இருக்க முடியாமல்
வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள்.
அரசாங்கத்தின் நடவடிக்கையாலே முதல் இருந்ததை விட தற்போது இறப்புக்கள் அதிகரித்துள்ளது.
தமிழர்களை எவ்வாறாவது நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற சிந்தனையுடனே
ஆட்சியாளர்கள் ஆட்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர்கள் நாட்டின் பிரஜைகள் ஆதிகால பூர்வீக குடிமக்கள் தமிழர்களே. இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வதனால் உங்களுடைய
சந்ததிக்கே இழுக்காக அமையும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : எச்சரிக்கும் பதிவாளர் திணைக்களம்
தந்தை செல்வாவின் புகழைக் கொன்ற தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் : ஆனந்தசங்கரி ஆதங்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |