பெருசு
வைபவ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பெருசு. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தை இளங்கோ ராமநாதன் என்பவர் இயக்கியிருந்தார்.
நிஹாரிகா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும் சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். ஆனால், லோ பட்ஜெட் ஆன பெருசு திரைப்படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த தமிழ் படத்தில் நிராகரிக்கப்பட்டேன் ஆனால்.. மனம் திறந்த நடிகை பூஜா ஹெக்டே
எப்போது தெரியுமா?
அடல்ட் நகைச்சுவை திரைப்படமாக பெருசு இருந்தாலும், குடும்ப ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வரும் பெருசு திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் வரும் 11-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது.