முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தின் விளைவு: சுமந்திரனுக்கு அர்ச்சுனா சாட்டையடி!

சுமந்திரன் கோரிய கதவடைப்பினை மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை என்றும், முத்தையன்கட்டு சம்பவத்தில் மூன்று முரண்பட்ட விடயங்கள் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தில் தகரங்களை களவாடவே ஐவரும் முகாமுக்குள் உள்நுழைந்தமையே உண்மையான சம்பவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் விரட்டியாதாக பொய்

சம்பவத்தை விரிவாக விவரித்த நாடாளுமன்ற உறுப்பினர், “இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளதால் அங்கு எஞ்சியுள்ள தகரங்களை எடுத்து தருவதாகவும் தனக்கும் ஒரு பங்கு தேவை என்று கூறிய சிப்பாய், குறித்த அப்பகுதியில் வசிக்கும் ஐவருடன் பகல் வேளையில் ஒன்றாக கூடி மது அருந்தியுள்ளார்.

இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தின் விளைவு: சுமந்திரனுக்கு அர்ச்சுனா சாட்டையடி! | Mp Archuna S Comments On Death Of Mullaitivu Youth

அதனை தொடர்ந்து, அவர்களை இரவு வரும்படி கூறியுள்ளார்.அச்சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட சிப்பாய் நித்திரையில் இருந்துள்ளார்.

உள்ளே நுழைந்த ஐவரையும் கண்ட இராணுவத்தினர் அவர்களை துரத்தியுள்ளனர்.அப்போது இவர்கள் தப்பியோடியுள்ளனர் அதில் ஒருவர் பிடிப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அவரை தாக்கியுள்ளனர்.

பின்னர் தப்பியோடியவர்கள், இராணுவம் விரட்டியாத பொய் கூறியதோடு ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை காணவில்லை என தெரிவிக்க பொது மக்கள் அன்றிரவு முழுவதும் தேடியுள்ளனர்.

மக்களை திசை திருப்பிய சுமந்திரன்

அதன் பின்னர், இராணுவம் மக்களை இந்த பக்கம் வரவேண்டாம் பயமுறுத்தியுள்ளனர்.அடுத்த நாளே சடலம் முத்தையன்கட்டு குளத்தில் மிதந்துள்ளது. அங்கிருந்து சிலர் எனக்கு சம்பவம் தொடர்பில் முழு விபரத்தையும் தெரிவித்தனர்.

இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தின் விளைவு: சுமந்திரனுக்கு அர்ச்சுனா சாட்டையடி! | Mp Archuna S Comments On Death Of Mullaitivu Youth

நான் குறித்த இடத்துக்கு செல்வதற்கு முன்னரே சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு சென்று மக்களை திசை திருப்பும் விதத்தில் கதைத்து சம்பவத்தை பூதாகரமாக்கியுள்ளனர்.

இதில் திருட்டுச் சம்பவம் மற்றும் போதை பொருள், இராணுவம் தாக்கியதாக மூன்று முரண்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன. காவல்துறையினர், இராணுவத்தினர் ஐவரை பிடித்து விசாரிப்பதால் அதற்கு தடையிருக்கும் என நினைத்து நான் போகவில்லை.
ஏனைய உறுப்பினர் அங்கு சென்றிருந்தனர்.

சுமந்திரன் கடந்த தேர்தலில் தோல்வியடைந்து பலாத்காரமாக தமிழரசுக் கட்சியின் செயலாளராகியவர்.கட்சியினரிடம் கலந்துரையாடாமல் வெள்ளிக்கிழமை ஹர்த்தால் என்றார்.

ஹர்த்தால்

ஆனால் மன்னார் மடுதிருவிழா என்பதால் மக்கள் விரும்பவில்லை.அதனால் இன்று முழுநாள் ஹர்த்தால் என்று சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அறிவித்தனர். 

இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தின் விளைவு: சுமந்திரனுக்கு அர்ச்சுனா சாட்டையடி! | Mp Archuna S Comments On Death Of Mullaitivu Youth

எனினும் அதனையும் மக்கள் விரும்பவில்லை.நல்லூர் திருவிழாவும் நடைபெறுவதால் மக்கள் அவர்களை திட்டினர். இச் சம்பவத்தில் காவல்துறையினர் சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலை ஆறு மணியில் இருந்து ஒன்பது மணிக்கு கடைகள் மூடியே இருக்கும்.வடக்கில் எல்லா கடைகளும் திறந்திருந்தனர்.இது மக்களின் ஹர்த்தால் அல்ல சுமந்திரன் -சாணக்கியன் கோரியதாகும். 

வடக்கு மக்களுக்கு மீண்டும் பிரச்சினைகளுக்கு செல்வதற்கான எந்த விருப்பமும் இல்லை, தோல்வியை சரி செய்வதற்காக திட்டமிடப்பட்ட தாகும்.” என்றார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.