முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாமர எம்.பி பிணையில் விடுதலை

புதிய இணைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு (Chamara Sampath Dassanayake) பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08.04.2025) முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கிய உத்தரவிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றிய சாமர சம்பத் தசநாயக்க, அம்மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு பைகள் வழங்குவதற்காக ஒரு அரச வங்கியிடம் நிதி உதவி கோரினார்.

அரச வங்கியிடம் நிதி உதவி 

ஆனால், அந்த வங்கி அவரது கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, ஊவா மாகாண சபைக்கு சொந்தமான 06 நிரந்தர வைப்பு கணக்குகளை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவந்து, அந்தப் பணத்தை எடுத்தார்.

சாமர எம்.பி பிணையில் விடுதலை | Mp Chamara Sampath Brought Before The Court

இதன் காரணமாக, மாகாண சபைக்கு 17.3 மில்லியன் ரூபாய்க்கு (173 லட்சம் ரூபாய்) மேல் நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் இணைப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (08) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.  

இரண்டாம் இணைப்பு

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை அவரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் சாமர சம்பத் எம்.பி !

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சாமர எம்.பி பிணையில் விடுதலை | Mp Chamara Sampath Brought Before The Court

இதன்படி, இன்று (07) காலை பதுளை (Badulla) நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இரண்டு குற்றச்சாட்டு

இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில்,  மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை இன்று (01) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவரை தொடர்ந்து எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த முதலாம் திகதி உத்தரவிட்டது.

சாமர எம்.பி பிணையில் விடுதலை | Mp Chamara Sampath Brought Before The Court

குறித்த உத்தரவை கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி பிறப்பித்திருந்தார்.

இந்தநிலையில், இன்று (07) அவர்  பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/F7ii3wotZr0

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.