ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கச்சதீவுக்கான திடீர் விஜயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ரஹ்மான் விமர்சித்துள்ளார். இந்திய நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த சி. ஜோசப் விஜய்யின் கூற்றை ஜனாதிபதி பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விஜயின் கோரிக்கையால் ஜனாதிபதி ஏன் வருத்தப்படவேண்டும்
“விஜய் குறுகிய காலமாகவே அரசியலில் இருக்கிறார். அவர் ஒரு தமிழக முதல்வர் வேட்பாளர் மட்டுமே. அவருக்கு அந்தப் பதவி கிடைக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அப்படியானால், அவரது கோரிக்கையால் ஜனாதிபதி ஏன் வருத்தப்பட வேண்டும்?” என்று ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
இந்திய அரசின் எதிர்வினை
கடந்த காலங்களில், தமிழக முதலமைச்சர்கள் கச்சதீவைக் கோரியிருந்தனர், ஆனால் இந்திய அரசு அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் அவர் மேலும் நினைவு கூர்ந்தார்.