வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள், நடிகைகளின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அப்படி வைரலாகும் புகைப்படத்தை பார்க்கும் பலரும், அதில் இருப்பது யார் என்று கேள்வி எழுப்புவார்கள். அந்த வகையில் தற்போது இந்திய சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
10 நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மிருணாள் தாக்கூர்
அவர் வேறு யாருமில்லை நடிகை மிருணாள் தாக்கூர் தான். ஆம், சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக Pooja Meri Jaan, Hai Jawani Toh Ishq Hona Hai, Son of Sardaar 2 என பல ஹிந்தி திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இவருடைய முதல் நேரடி தமிழ் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.