முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பலஸ்தீனத்துக்கு எதிராக செயற்பட்ட இலங்கை புலனாய்வு பிரிவினர்..! சபையில் அம்பலம்

இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவராலயத்தின் ஊடகப் பிரிவில் வேலை செய்யும் அதிகாரியின் வீட்டுக்கு சென்ற புலனாய்வு பிரிவினர், இஸ்ரேலுக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

இந்த அரசாங்கம் பலஸ்தீன் போர் விவகாரம் தொடர்பில் இரண்டும் கெட்டான் நிலையில் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(09.09.2025) இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இது தொடர்பில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

“பலஸ்தீனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் பலர் புலனாய்வு துறையால் அச்சுறுத்தப்படுகின்றனர். புலனாய்வாளர்கள் செய்யும் வேலையா இது? இவ்வாறான நிலையில், கடந்த ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி பத்து ஊடகவியலாளர்கள் இஸ்ரேலுக்கு ஊடகத்துறை கற்றலுக்காக செல்கின்றனர்.

அரசாங்கத்தின் நிலைப்பாடு

ஊடகவியலாளர்கள் 250 பேரை கொன்று குவித்த இஸ்ரேலுக்கு ஊடக கற்கை நெறியை கற்பதற்கு சென்றார்கள் ஏன் என்று தெரியவில்லை. அக்குழுவில் அரசாங்க ஊடவியலாளர்களும் அடங்குகின்றனர்.

பலஸ்தீனத்துக்கு எதிராக செயற்பட்ட இலங்கை புலனாய்வு பிரிவினர்..! சபையில் அம்பலம் | Mujibur Rahuman

இதில் இரு யுடியுப் ஊடகவியலாளர்கள் இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுத்தியவர்கள். அது மிகவும் பயங்கரமானது. அவர்கள் மொசாட்டில் பயிற்சி எடுப்பதற்காகவா சென்றனர். இது தொடர்பில் விசாரணை நடத்துங்கள்.

பலஸ்தீன ஒருமைப்பாட்டு அமைப்பின் தலைவர் பிமல் ரத்நாயக்கவின் அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும் இக் குழுவில் சென்றுள்ளார். அரசாங்கத்தின் நிலைப்பாடு என்வென்று தெரியவில்லை.

அரசியல் நாடகம்

ஒரு பக்கம் பலஸ்தீனுக்கு ஆதரவாக செயற்படும் அரசாங்கத்தின் கொள்கை என்னவென்று தெரியவில்லை.

பலஸ்தீனத்துக்கு எதிராக செயற்பட்ட இலங்கை புலனாய்வு பிரிவினர்..! சபையில் அம்பலம் | Mujibur Rahuman

ஜனாதிபதி அநுர பலஸ்தீன் தொடர்பில் மௌனம் காப்பது ஏன்? தேர்தல் காலத்தில் அநுர இருமுறை இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவராலயத்திற்கு சென்றார்.

இன்று அமெரிக்காவின் அழுத்தமா இதற்கு காரணம். அரசியல் நாடகம் வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.