வடக்கு – கிழக்கில் உள்ள மக்களை இராணுவத்தினர் மிக மோசமாக நடத்துவதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “வடக்கு – கிழக்கில் இராணுவ முகாம்கள் அங்குள்ள மக்களை எவ்வாறு உபயோகப்படுத்துகின்றார்கள் என்பதற்கு இந்த மரணம் ஒரு உதாரணம்.
அவர்கள் அங்குள்ள மக்களுக்கு விரோதமாக செயற்படுகின்றார்கள். அம்மக்களை கொண்டு தங்களுக்கு தேவையானவற்றை செய்து கொள்கின்றார்கள்.
அது மட்டுமல்லாமல் வடக்கு – கிழக்கு மக்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிக்கின்றார்கள்” என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் குறிப்பிட்டதாவது,