ஊழலற்ற ஆட்சி முறை ஒன்றை உருவாக்குவதற்காகவே நாங்கள் சஜித் பிரேமதாவுக்கு
ஆதரவு தெரிவித்துள்ளோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு
சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, தரும்புரத்தில் நேற்று (09.09.2024) மாலை நடைபெற்ற தேர்தல்
அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்
கூறியுள்ளார்.
தேர்தல் பணிகள்
கடந்த 02ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள சமத்துவ கட்சி அலுவலகத்தில் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாருடன் சஜித் பிரேமதாச
செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல
பகுதிகளிலும் சமத்துவ கட்சியின் ஊடாக பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக நேற்றையதினம்(09) கிளிநெச்சி, தர்மபுரம், பிரமந்தனாறு ஆகிய
பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டதுடன் கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் தேர்தல்
கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.