முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு : இம்ரான் எம்.பி பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் வெகுவாகப்
பாதிக்கப்படும் என திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிண்ணியாவில் (Kinniya) நடைபெற்ற தேர்தல்
பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தேசிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினராக வரக் கூடிய செல்வாக்குள்ள
முஸ்லிம்கள் யாருமில்லை. அவர்கள் கூறுவது போல ஆட்சியமைத்தாலும் அவர்களது
அமைச்சரவையில் பொறுப்புள்ள முஸ்லிம்கள் யாருமிருக்க மாட்டார்கள்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிப்பு 

இதனால்
முஸ்லிம்கள் நலன் சார்ந்த விடயங்கள், பண்பாடு, கலாசாரம் சார்ந்த விடயங்களை பேச
அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். இது முஸ்லிம் மக்களுக்கு பாரிய இழப்புகளை
ஏற்படுத்தும்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு : இம்ரான் எம்.பி பகிரங்கம் | Muslims Will Suffer If Npp Comes To Power In Sl

ஜனாதிபதி கோட்டாபயவின் (Gotabaya Rajapaksa) அமைச்சரவை மூலம் இதனை நாம் தெளிவாக அறிந்து கொண்டோம்.
முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது கோட்டாபயவின் அமைச்சரவையில்
எடுத்துக் கூறி அதனைத் தடுக்கக் கூடியவர்கள் யாரும் இல்லாமை நமக்கு நல்ல
உதாரணமாகும்.

இதுபோன்ற நிலைமையே தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தாலும் உருவாகும். தேசிய
மக்கள் சக்தியில் உள்ளவர்களுக்கு முஸ்லிம் கலாசார பண்பாட்டு விடயங்கள்
தெரியாது.

இஸ்லாம் சிறுவர்களை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தவதாக பிமல்
ரத்நாயக்க கூறியுள்ளார். இதேபோல அக்கட்சியில் உள்ள இன்னும் சிலரும் இஸ்லாம்
பற்றிய சரியான புரிதல் இல்லாமல் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

சிலவேளை முஸ்லிம்களை தமது கட்சியில் உள்வாங்கியுள்ளோம் என்று காட்டுவதற்காக
முஸ்லிம் பெயர் தாங்கிய சிலரை தேசியப் பட்டியல் ஊடாக அவர்கள் உள்வாங்கலாம்.
அதுவும் ஆபத்தானது தான்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு : இம்ரான் எம்.பி பகிரங்கம் | Muslims Will Suffer If Npp Comes To Power In Sl

கடந்த காலங்களில் அவர்கள் உள்வாங்கிய முஸம்மில்
முஸ்லிம்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை நாம் இன்னும் மறக்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் முஸ்லிம்கள் பாரிய
பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இதனைக் கருத்தில்
கொண்டு முஸ்லிம்கள் தமது வாக்குகளை அளிக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு
அடுத்தவர் வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடக் கூடாது. நமது கையால் நமது கண்களை
குத்திக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கிட விடக்கூடாது.“ என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.