“நான் மைத்திரிபால சிறிசேனவின் காவலன் அல்ல. சிறிலங்கா சுதந்திரக் கட்சியை
மீட்கவே வந்துள்ளேன்” என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச(Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
மேலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் கட்சியைப்
பலப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்
இலக்கு
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது”நான் பதவிகளுக்காகச் சண்டையிடுபவன் அல்ல.சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றும்
நோக்கமும் கிடையாது.
கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே பதவியை
ஏற்றேன்.இதன் பின்னணியில் வேறு சூழ்ச்சி எதுவும் இல்லை.
கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த எரிக் சொல்ஹெம்
அதிபர் தேர்தல்
சுதந்திரக் கட்சியில் உள்ள எந்தவொரு தரப்புடனும் எனக்குப் பிரச்சினை இல்லை.
நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டவர்களுடன் இணைந்து
செயற்பட்டுள்ளேன்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்தால் கட்சியைப் பலப்படுத்தலாம். கட்சி முடிவெடுத்தால் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார்.” என்றார்.
என்னைக் கொலை செய்ய சதித்திட்டம்: ரொசான் ரணசிங்க சுட்டிக்காட்டு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |