மியான்மர் (myanmar), தாய்லாந்தில் (thailand) நாடுகளில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஏதாவது உதவி தேவைப்படுவோர்,
1800 309 3793
+91 80690 09901
+91 80690 09900
ஆகிய எண்களில் தொடர்புகொள்ள முடியும் என அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்பு
மியான்மரில் (பர்மா) ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது.

மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் மேற்கண்ட நாடுகளில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு நிவாரண உதவிகளை வழங்க பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

