பிரித்தானியாவில்(Uk) கரையொதுங்கிய மர்ம உயிரினம் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில், கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு ஒரு தம்பதியர் சென்றுள்ளனர்.
அதன்போது, கடற்கரையில் கரையொதுங்கி இருந்த விசித்திர உயிரினத்தை கண்ட தம்பதியர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
கரை ஒதுங்கிய உயிரினம்
குறித்த உயிரினம் மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உடல் மற்றும் தலையுடன் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தம்பதி கடற்கன்னியை கண்டதாக பதிவிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.