முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்கொரியா எல்லையில் தொடரும் பதற்றம்: விநோதமான தாக்குதலை முன்னெடுக்கும் வடகொரியா

வடகொரியா (North Korea) தென்கொரியாவைக் குறிவைத்து மிக வினோதமான தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

இராணுவம், ஏவுகணை போன்றவை வடகொரியா நடத்தும் இந்த உளவியல் தாக்குதலில் தென்கொரிய எல்லையோர கிராமம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே பல காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனால் இரு கொரிய நாடுகளின் எல்லைகள் பதற்றமாக இருக்கும்.

இதற்கிடையே தென்கொரியாவில் வினோதமான தாக்குதலை வடகொரியா நடத்தி இருக்கிறது.

வினோதமான ஒலி

தென் கொரியா எல்லையில் அமானுஷ்யமான, வினோதமான ஒலிகளை இப்போது வடகொரியா ஒலிபரப்பி வருகிறது.

தென்கொரியா எல்லையில் தொடரும் பதற்றம்: விநோதமான தாக்குதலை முன்னெடுக்கும் வடகொரியா | Mystery Noises Spark Chaos At Korea Border

இது தென்கொரியக் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

எல்லையில் உள்ள டாங்சன் என்ற கிராமத்தைக் குறிவைத்துத் தான் வடகொரியா இதைச் செய்து வருகிறது.

அங்கு கார் விபத்துகள் ஏற்படுவது போன்ற சத்தம், பேய் அலறுவது என்று தொடர்ச்சியாக வினோதமான சத்தங்களை ஒலிப்பெருக்கியில் போட்டு வடகொரியா ஒலிபரப்புகின்றது.

இது அங்குள்ள கிராம மக்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.

அப்பகுதி மக்கள் மேலும் கூறுகையில், “பல மாதங்களாகவே தொடர்ந்து இதைச் செய்து வருகிறார்கள். முன்பாவது மனித ஒலிகளைத் தான் எழுப்பினார்கள்.அதைச் சற்று சமாளிக்கும் வகையில் இருந்ததது.

ஆனால், இப்போது பேய் சத்தம், உலோகங்கள் மோதும் சத்தம் என எல்லை மீறிப் போகிறார்கள்” என்றார்.

தென்கொரியா எல்லை

இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு உதவியது.

தென்கொரியா எல்லையில் தொடரும் பதற்றம்: விநோதமான தாக்குதலை முன்னெடுக்கும் வடகொரியா | Mystery Noises Spark Chaos At Korea Border

இருப்பினும், இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என்று வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது. முதலில் தென்கொரியா தனது நட்பு நாடுகளுடன் போர்ப் பயிற்சி செய்தது.

அதன் பிறகே எல்லையில் வினோத தாக்குதல்கள் நடக்கத் தொடங்கின.

முதலில் வடகொரியாவில் இருந்து தப்பி வந்தவர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய நோட்டீஸ்களை தென்கொரியா வீசியது.

அதற்குப் பதிலடியாக வடகொரியா குப்பைகள் நிரப்பப்பட்ட பலன்களை தென்கொரியா மீது அனுப்பி வெடிக்கச் செய்தது.

இதற்குப் பதிலடியாக தென்கொரியா எல்லையில் ஒலிப்பெருக்கி வைத்துப் பாடல்களை ஒலிபரப்ப தொடங்கியது.

ஆனால், உளவியல் ரீதியாகத் தாக்க மோசமான சத்தங்களை வடகொரியா ஒலிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.